
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 99 சதவீத விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கைகள் கத்தோலிக்க திருச்சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க சமூகம் இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.