
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்களை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து வழங்கப்பட்ட பின்னர் வெளிநாட்டில் உள்ள ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நோயாளி ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிந்தாலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு 72வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளிக்கு காயங்களை ஆற ஆண்டிபயாடிக் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.