
லிட்ரோ நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு வழங்குவதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
2024-2025 காலப்பகுதிக்கான எல்பி எரிவாயு விநியோகத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அது தொடர்பான மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறுதி வரை தடையின்றி LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான அரசாங்கக் கொள்முதல் வழிகாட்டுதல்களின் விதிகளின்படி தற்போதைய சப்ளையரிடமிருந்து தற்போதைய கால ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50% ஐ மீள் கட்டளையாக கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.