
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீசா முறைமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டில் வீசா முறையை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களமனது வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து விசா போன்ற மூன்று வகையான விசாக்களை வழங்குகின்றது.
இதேவேளை, வருகை விசா மற்றும் வசிப்பிடம் ஆகிய 02 வகையான விசாக்களின் கீழ் வழங்கப்பட்ட விசா வகைகளில் தற்போதுள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய விசா முறைகளை மேலும் எளிமைப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைச்சர்கள் பேரவை ஒப்புதல் அளித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.