
நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா இறக்குமதி அனுமதி முறையை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியும் கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கோதுமை தானியங்களுக்கு 6 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும் இதன் காரணமாக சந்தையில் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் இறக்குமதி கட்டுப்பாட்டை ஏற்படுத்தவே இவ்வாறான புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.