
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மீன்பிடி, கடல் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீடத்தில் 2022/2023 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறப்பு விழா ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்படி, இரண்டு மாணவர்களுக்கு பீடாதிபதி விருதும் மேலும் இரண்டு மாணவர்களுக்கு பீடாதிபதி பட்டியலுக்கு தெரிவானதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் இ.பி.எஸ்.சந்தன மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள், கடற்றொழில், கடல்சார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் அனைத்து கல்வி, நிர்வாக மற்றும் கல்விசாரா ஊழியர்கள், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.