
2020 ஆம் ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னரும் ஏறக்குறைய 6,900 வாகனங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில், காவல் துறைக்கு 3,000 வாகனங்கள் கொண்டு வரப்பட்டதுடன்
அவற்றுள் முச்சக்கர வண்டிகளும் ஜீப் வண்டிகளும் அடங்கும். அத்துடன், நோயாளர் காவு வண்டிகள், பொதுத் திட்டங்களுக்குத் தேவையான வாகனங்கள் மற்றும் தூதரகங்களுக்குத் தேவையான வாகனங்களும் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும், கொண்டுவரப்பட்ட வாகனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் இல்லை என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யாரேனும் சட்டவிரோதமாக வாகனங்களை கொண்டு வந்திருந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.