
40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாத நபர் 2500 ரூபா அபராதம் செலுத்த வேண்டும்.
இதன்படி, முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்காக 2500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடம் இருந்து மட்டும், திருத்தத்துக்கு முந்தைய அபராதத் தொகையான 250 ரூபாவினை வசூலிக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அப்பகுதி கிராம அலுவலர் குறித்த நபர் குறைந்த வருமானம் உள்ளவரா என, பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் 250 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட கிராம அதிகாரியின் பரிந்துரையை தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் உடனடியாக தனது திணைக்களத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 40 வயதுக்கு மேற்பட்ட ஆனால் இதுவரை தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 க்கு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஆணையாளர் நாயகம் மேலும் அறிவுறுத்துள்ளார்.