
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுடில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இரகசியமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் காலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்தத்தோடு, சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1180 சிகரெட்டுகளை வைத்திருந்த 38 வயதுடைய மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காலி தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.