
“அஸ்வசும நலன்புரித்திட்டம்” பணத்தினை கணக்குகளில் வரவு வைப்பதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் நிதி அமைச்சில் நடைபெற்றது.
இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர்கள் மற்றும் அரச வங்கிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.