
66 ஆவது மலேசியாவின் தேசிய தினம் மலேசியா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த மலேசிய தேசிய தின விழா நேற்று (31) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. .
குறித்த நிகழ்வுக்கு நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வா, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, மலேசிய உயர்ஸ்தானிகராலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஏராளமான இராஜதந்திரிகள். பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.