
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடு இன்றி பேணுவதற்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் மற்றும் எரிபொருள் ஒழுங்குகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, இன்று (01) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.