
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்வதே என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதன் மூலம் தற்போது நிலவி வந்த சமூக, பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு வந்ததுடன் மக்களின் வாழ்வும் ஸ்திரப்படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக எரிசக்தி துறையில் விரைவான தீர்மானங்கள் மற்றும் கொள்கை தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தேவையான உண்மையான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.
மேலும், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அமைப்பின் மூலம் 3500 இலட்சத்திற்கும் அதிகமான எரிபொருள் விநியோக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் சந்தையில் புதிய விநியோகஸ்தர்களை இணைத்ததன் காரணமாக செப்டம்பர் முதலாம் திகாதி முதல் எரிபொருள் பெற QR குறியீடு தேவையில்லை என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்தார்.