
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் வினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவிக்கின்றார்.