
மழைநீரைப் பயன்படுத்தி பருவத்திற்கான அடிப்படை நிலத் தயார்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தால் சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தால் நீர்த்தேக்கங்களில் நீரை சேமித்து அதிக பருவத்தில் விவசாயம் செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
அத்தோடு, விவசாய அதிகாரிகள் ஊடாக மேலதிக தகவல்கள் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.