
ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் 40,000 மாணவர்களில் ஒரு சில துறைகளைத் தவிர ஏனைய மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளாக சமூகத்துடன் இணைவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, வருடாந்தம் 40,000 தொடக்கம் 50,000 வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்ற போதிலும், உற்பத்தியில் பிரச்சினை காணப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் கல்வித்துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.