
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, திருகோணமலை, மதுரங்குடா கடற்பகுதியில் கடற்படைக் கப்பலான வரகம்பவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நான்கு பேருடன் படகு மற்றும் சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்ட குச்சவெளி மற்றும் பொடுவகட்டு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள், படகு மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.