
வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பெண் ஒருவர் முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.