
குழந்தைகளுக்கு இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி குறித்து பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் பாராளுமன்ற மன்றம் கவனம்செலுத்துகின்றது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, சமூகத்தில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு சிறந்த புரிதலை வழங்குவதற்காக இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத்தின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளதுடன் மாணவர்கள் தமது பிரச்சினைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கக்கூடிய பாடசாலை முறைப்பாட்டுப் பெட்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.