
இணையம் ஊடாகப் பரப்பப்படும் தவறான தகவல்களாலும், தீங்கிழைக்கும் சூழ்ச்சிகளாலும் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் சட்ட வரைவினால் தயாரிக்கப்பட்ட இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, குறித்த சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதோடு பொது பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.