
எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலோ அல்லது எந்தவொரு தேர்தலோ பிற்போடப்பட மாட்டாது எனவும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட தினத்தில் சட்டரீதியாக நடத்தப்படும் எனவும், அதில் எவ்வித சந்தேகமும் ஏற்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.