
ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தங்களது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டும் என இன்றைய தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்படி, பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்காவும் குறித்த விடையம் அமைந்திருக்கலாம் எனவும் அல்லது சிலரது அரசியல் நோக்கங்களினை திருப்திப்படுத்துவதற்காகவும் செனல் 4 குறித்த வீடியோவினை வெளியிட்டு இருக்கலாம் என்றும் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தோடு, 2009 ஆம் ஆண்டின் யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னும் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயரோடும்செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளதர்க்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குள் நடத்துவதற்கு இடமளித்தால் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.