
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமித்துள்ளதாக மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
இதன்படி, இன்று (06) காலை அரசாங்க செய்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் பொலிஸாரின் பங்கு மற்றும் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவினை எதிர்த்துப் போராடுவதற்கு மேற்கொள்ளப்படும் குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்குப் பின்னர், அது குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.