
இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கியை திருடிவிட்டு தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவர் புகையிரதத்தில் பயணித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த இராணுவச் சிப்பாய் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, மாங்குளம் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இயந்திரமயமாக்கப்பட்ட காலாட் படையணியின் கெக்கிராவ முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.