
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் கணக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், முடிவு மறு ஆய்வு விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.