
அஸ்வசும நாலன்புரி பயனாளிகளில் கணக்கு உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு 1,550 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு ஜூலை மாதக் கொடுப்பனவுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை (08) பயனாளிகளின் கணக்குகளில் வங்கிகள் பணம் வரவு வைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கணக்குகளை உறுதி செய்த பின், மீதமுள்ள பயனாளிகளுக்கு, ஜூலை மாதத்துக்கான தொகையை செலுத்திய பின், அனைத்து பயனாளிகளுக்கும், ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் திஜேரிவித்தார்.
இதேவேளை, முதற்கட்டமாக, 791,000 பயனாளி குடும்பங்களுக்கு 5’016 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், “அனர்த்தம்” தொடர்பான 1’048’170 குடும்பங்களுக்கு இதுவரை 6,566 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்தியுள்ளதாகவும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.