
உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலமும் எவ்வித திருத்தங்களும் இன்றி இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.