
கொழும்பு பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் தொட்டலக குமாரியின் பிரதான சீடரான மகோலா சூதா என்பவரை ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, விசேட அதிரடிப்படை தலைமையக முகாம் விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகொல வீதி, கனத்த ஹண்டியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அங்கு நீண்டகாலமாக கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் தொட்டலக குமாரியின் பிரதான சீடர்களில் ஒருவரான மாகொல வடக்கைச் சேர்ந்த 50 வயதுடைய மாகொல சூதா 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.