
செனல் 4 ஊடகம் வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் சார்பிலான காணொளி தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு எந்தவொரு நபரின் அல்லது நிறுவனத்தினதும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பு அமைச்சு மதிப்பதாகவும் புலனாய்வு இதழியலின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செனல் 4 வெளியிட்ட ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரபூர்வமற்ற கூற்றுக்களால் எழும் திட்டமிடப்படாத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு செனல் 4 நிச்சயமாக பொறுப்புக்கூற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.