
இரத்தினபுரி, கஹாவத்தை ஆதார வைத்தியசாலையின் கண் மருத்துவர் உரிய அறிவித்தல் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் கைவிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, மருத்துவர் சென்றதால் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, வைத்தியசாலையில் நாளாந்தம் 100 – 150 கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வாரத்தின் ஆறு நாட்களும் கண்சிகிச்சை நடைபெற்று வந்ததோடு இதற்காக கஹவத்தை, கொடகவெல, ஓபநாயக்க, பெலமடுல்ல, பலாங்கொடை மற்றும் வெலிகேபொல பிரதேசங்களில் இருந்து நோயாளர்கள் வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும், இதனால் ஏற்பட்ட கடும் அசௌகரியம் காரணமாக மாற்று கண் வைத்தியரை கஹவத்தை வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.