
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையை அறிய கத்தோலிக்க சமூகம் மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தீய கரங்கள் இருப்பது தெளிவாகி வருவதாகவும் பேராயர் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையை கண்டறிய சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என்பது மேன்மேலும் நிரூபிக்கப்பட்டு வருவதாகவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தவறு செய்தவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டால் அவர்களை மன்னிக்கத் தயார் எனவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.