
செனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா அல்லது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்வதா என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ “சந்தேக நபர்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் திருத்தும் முயற்சியே. சுரேஷ் சலேவை தூக்கிலிடச் சொல்லவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாவுக்கு சிறைத் தண்டனை வழங்கக் கேட்கவில்லை. குற்றவாளிகள் என்று அறிவிக்கவில்லை. விரிவான விசாரணையை நாங்கள் கேட்கிறோம். இதில் வெளிப்படையான அறிக்கையை சமர்ப்பிக்கவும். அதற்கு பிறகு நீங்கள் சொல்வதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என தெரிவித்தார்.