
(இஸ்ஸதீன் ஹம்தான்)
பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்ற இருக்கின்றனர்.
இதன்படி, பாடசாலையில் இருந்து மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கான புதிய மேலங்கியினை பாலமுனை கிராமத்தை சேர்ந்த டபிள்யு.எம்.
அறபாத் மற்றும் அவரது பாரியார் என். நஸ்மிலா ஆசிரியை ஆகியோர் இன்று (11) பாடசாலை அதிபர்கே.எல்.உபைதுள்ளா, உட்பட ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.