
ஒரு நாடு என்ற வகையில் இருதரப்பு வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே செலுத்தப்படாமல் உள்ளதாகவும், ஏனைய அனைத்து கடன் தவணைகளும் ஏற்கனவே செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தற்போது 3.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருப்பதாகவும் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.