
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் திட்டத்தின் முதல் மதிப்பீடு எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் குழுவை பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை விடுவிக்கப்படும் எனவும் யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.