
இன்று (12ஆம் திகதி) காலை ரயில் மறியல் போராட்டத்தினால் உயிரிழந்த இளைஞருக்கான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் ஆரம்பத்தில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உயிரிழந்த இளைஞருக்கு இரங்கல் தெரிவித்தார்.
அத்தோடு,குறித்த மரணத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கடும் வாகன நெரிசல் காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 20 வயதுடைய மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.