
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அடுத்த ஆண்டுக்கான தினசரி தானியங்கி விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதன்படி, எரிபொருள் விநியோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டதாகமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு , எரிபொருள் விநியோகிப்பாளர்களுக்கு 2024 முதல் தினசரி தானியங்கி விலை திருத்தும் முறையை நடைமுறைப்படுத்துவது மற்றும் அனைத்து எரிபொருள் விநியோகம் மற்றும் பங்குகளை எடுத்துச் செல்லும் வசதிகளை புதிய உபகரணங்களுடன் தானியக்கமாக்குவது குறித்தும் எரிபொருள் விநியோகிப்பாளர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விநியோகம், எதிர்கால அபிவிருத்திகள் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களை ஸ்தாபித்தல் தொடர்பான விடயங்களும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட அமைச்சர் மேலும் தெரிவித்தார்.