
பொரளை பிரதேசத்தில் உயர் பொலிஸ் உத்தியோகத்தர் என கூறி நபரிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சந்தேக நபர் இரண்டு தடவைகளில் தன்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக மொரட்டுவ பொலிஸில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய குறித்த யுவதி மலையகத்தில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.