
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த பாதாள உலக குழு உறுப்பினரை அழைத்து வந்ததையடுத்து மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவை சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், திட்டமிட்ட குற்றவியல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான சஞ்சீவ குமார சமரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சேனாதிரகே கருணாரத்ன என்ற பெயரில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்கு வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், குடிவரவு அதிகாரிகள் கணேமுல்ல சஞ்சீவவினை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் பாதுகாப்பில் இரவு 11.30 மணியளவில் பேலியகொடையில் உள்ள மேல்மாகாண வடக்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.