
சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ‘கோப்’ குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொதுஜன பெரமுனவின் இலக்குகளில் இருந்து அரசாங்கம் விலகினால் முரண்பாடுகள் ஏற்படலாம் எனவும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
நாடு மிகவும் நல்ல நிலையில் உள்ளதாக யாராவது கூறினால் அதற்குக் காரணம் அரசாங்கம் இன்னும் கடனை செலுத்த ஆரம்பிக்கவில்லை எனவும், கடனை செலுத்த ஆரம்பித்த பின்னரே நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனைத் தெரிவித்தார்.
மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்திருப்பது அரசை பாதுகாக்கும் நிபந்தனையற்ற கடப்பாடு மாத்திரமே எனவும், பொதுஜன பெரமுனவின் நோக்கங்களில் இருந்து அரசாங்கம் விலகினால் அரசாங்கத்துடன் மோத நேரிடலாம் எனவும் கோப்’ குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பொதுஜன பெரமுன கட்சியின் இலக்குகளுடன் முரண்படுமாயின் அது பெரிய பிரச்சினையின் உருவாக்கும் எனவும், அரசாங்கம் அரசைப் பாதுகாப்பதுடன், பெரும்பான்மையான மக்களின் தேவைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் கோப்’ குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.