
(இஸ்ஸதீன் ஹம்தான்)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் 23ஆவது ஞாபகார்த்த நிகழ்வும் துஆப்பிராத்தனையும் இன்று (16) அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் ஸரீப் பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (PRO) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஈழமதி ஜப்பார் உட்பட உலமாக்கள்,பள்ளிவாசல் நிருவாகிகள்,ஊடகவியலாளர்கள், ஓய்வு நிலை அரச உயர் அதிகாரிகள், முன்னாள் ஓய்வு நிலை அதிபர்கள்,மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், .மு.காங்கிரஸ்,அ.இ.ம.காங்கிரஸ், தே.காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள்,என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.