
கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, மாவட்டச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் அமர்வின்போது, கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் கேட்டறியப்பட்டுள்ளதோடு கிராம சேவை உத்தியோகத்தர்களின் தற்போதைய கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சேவை உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக தமது கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி வருகின்றனர்.