
யாழ்ப்பாணத்தில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் 01 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சுமார் 01 கிலோ 40 கிராம் எடையுடைய போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா எனவும் சந்தேக நபருடன் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தாகவும் சந்தேக நபர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.