
(இஸ்ஸதீன் ஹம்தான்)
பாலமுனை மெரூன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மர்ஹூம் எம்.எஸ்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த ‘பாலமுனை சம்பியன் வெற்றிக் கிண்ணம் 2023’ (மின்னொளியிலான ஒருநாள் கிரிக்கட் சுற்றுப் போட்டி) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இதன்படி, பாலமுனையில் உள்ள பிரதான எட்டு விளையாட்டு கழகங்களை கொண்டு நடாத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டித் தொடரில் பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம் மற்றும் பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகின. இதில் பாலமுனை அல் அறபா விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது. மஹாஸினி அணி இரண்டாமிடத்தை பெற்றது.
மெறூன்ஸ் விளையாட்டு கழக தலைவர் எம்.ஏ.அபுசாலி JP (CMSO) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் சட்டமுதுமானி கௌரவ அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்களும், விஷேட அதிதியாக முன்னாள் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் அவர்களும் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், உயர்பீட உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள், விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.