
பொலிஸாரின் பிடியில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான சஞ்சீவ குமார சமரரத்ன என்றழைக்கப்படும் “கணேமுல்ல சஞ்சீவ” என்பவருக்கு சொந்தமான T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அங்கொட பிரதேசத்தில் ஒரு இடத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும், திட்டமிட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனுமான “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் பிரகாரம் இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.