
(ரஞ்சன் கஸ்தூரி)
மருத்துவமனைகளில் பயிற்சி பெற்ற நிபுணர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல மருத்துவமனைகளில் CT, MR, I மற்றும் PET ஸ்கேன் பரிசோதனை சேவைகள், இதய வடிகுழாய் பரிசோதனை அறுவை சிகிச்சை சேவைகள் மற்றும் கதிர்வீச்சு பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளில் பணியாற்ற வெளியேறியமைகுறித்த நிலைக்கு காரணம் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, மஹாநுவர போதனா வைத்தியசாலை, கராப்பிட்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை கேகாலை மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளில் பரிசோதனைகள் நிறுத்தப்படும் எனவும் அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.