
(இஸ்ஸதீன் ஹம்தான்)
நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான அக்கரைப்பற்று வலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில், கலந்து கொண்ட 72 பாடசாலைகளுடன் போட்டியிட்டு பாலமுனை அக் / அல் ஹிக்மா வித்தியாலயம் அதித திறமைகளை வெளிக்காட்டி 15 போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
வலய மட்டத்தில் வெற்றியீட்டி எதிர்வரும் 19ம் திகதி மாகாண மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ் வழங்கி சீருடை அணிவிக்கும் நிகழ்வு அதிபர் ALM.பாயிஸ் அவர்களின் தலைமையில் வெள்ளியன்று பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை விளையாட்டுப் பொறுப்பாசிரியர் AHM.தபறானி, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MM.சாஜின் ஆகியோருடன் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, மாகாண மட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.