
சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவர்களுக்கும், கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள நாட்டின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங் மேலும் தெரிவித்துள்ளார்.