
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .
இதன்படி, நேற்றிரவு லஹிரு விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து தனது தனிப்பட்ட காரில் அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், நேற்று இரவு 10.3மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் எனவும் துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சிறிது சேதமடைந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித சேதங்களும் எல்லை என்றும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிகின்றனர்.