
ஊழியர் தரம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக மின்சார சபை நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சார சபையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் எவ்வாறான நிலையில் உள்ளது, பணிகளுக்கான தேவைகள் என்பதோடு துறையில் உள்ள அளவுகோல்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் தெரிந்துகொள்வதற்கு குறித்த அறிக்கை வாய்ப்பளிக்கும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வரவிருக்கின்ற மறுசீரமைப்பு செயல்முறைக்கு குறித்த அறிக்கை அத்தியாவசியமானது எனவும் தற்போது 23,419 பேர் மின்சார சபையில் பணிபுரிவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.